ஒரு மழை காலத்து
மாலை நேரம்
பக்கத்து பங்களாக்களில்
வெளிப்படும்
வெறுப்பேற்றும்
உணவு வாசனை
வந்தேறிகள் உயர்ரகம்
இம்மண்ணிலே பிறந்த
நங்கள்
தீண்ட தகாதவர்கள்
கல்லால் விரட்டப்படுகிறோம்!!!
nathiyinkathalan
Thursday, October 28, 2010
Saturday, October 23, 2010
கொலைத்தொழில்
மாய உலகமிது
மந்திர உலகமிது
இன்பமும் துன்பமும்
அமாவாசை,பௌர்ணமி போல
மாறி மாறி வரும்
பாலஸ்தீனம்,ஈழம் போல
நானும், நீயும்,நம் இனமும்
கேட்க நாதியற்று
கொல்லநேரலாம்
அது தீபாவளி,ரம்ஜான்,சாதாரண ஞாயிராகவும்
இருக்க நேரலாம்
கொள்வது அவர்கள் தொழில்
அது ஆடாகவும் இருக்கலாம்
மனிதனாகவும் இருக்கநேரலாம்!!!
Wednesday, September 22, 2010
காதல்கவிதைகள்
நான் சாகும் தருவாயிலவது
வந்துவிடு உன் இதயத்தில்
சிறுதுளியாவது ஈரம் இருக்கிறதா
நான் பார்க்கவேண்டும்!!....
வந்துவிடு உன் இதயத்தில்
சிறுதுளியாவது ஈரம் இருக்கிறதா
நான் பார்க்கவேண்டும்!!....
Friday, September 10, 2010
அவலம்
நத்தையின்
உயிர்ப்போன அவலத்தை
உலகுக்கு தெரிவித்தபடி
ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன
நொறுங்கிய நத்தை ஓடுகள்.....
உயிர்ப்போன அவலத்தை
உலகுக்கு தெரிவித்தபடி
ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன
நொறுங்கிய நத்தை ஓடுகள்.....
Subscribe to:
Posts (Atom)