மாய உலகமிது
மந்திர உலகமிது
இன்பமும் துன்பமும்
அமாவாசை,பௌர்ணமி போல
மாறி மாறி வரும்
பாலஸ்தீனம்,ஈழம் போல
நானும், நீயும்,நம் இனமும்
கேட்க நாதியற்று
கொல்லநேரலாம்
அது தீபாவளி,ரம்ஜான்,சாதாரண ஞாயிராகவும்
இருக்க நேரலாம்
கொள்வது அவர்கள் தொழில்
அது ஆடாகவும் இருக்கலாம்
மனிதனாகவும் இருக்கநேரலாம்!!!
No comments:
Post a Comment